பாரியளவிலான 6 புதுப்பிக்கத்தக்க சக்தி (Renewable Energy Projects) திட்டங்களை அடுத்த ஆண்டினுள் செயற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் COP 28 மாநாட்டுக்காக டுபாய் செல்ல முன்னர் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோருடன் கலந்துரையாடியிருந்தார். இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்காக தற்போதுள்ள சகல பிரச்சினைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளை அழைத்து தீர்வை வழங்க ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க கடந்த வாரம் ஏற்பாடு செய்திருந்தார்.
இதற்கமைய 1,500 மெகாவாட்ஸுக்கும் அதிகமான 6 புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மிக்க திட்டங்கள் நாட்டில் நிறுவப்படவுள்ளன. முதலாவது புதுப்பிக்கத்தக்க திட்டமாக 700 மெகாவாட்ஸ் சூரியசக்தி மின் திட்டம் நிறுவப்படவுள்ளது. இந்தத் திட்டம் 12 முதல் 24 மாதங்களினுள் நிறைவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.