அஞ்சி வந்து
கெஞ்சி நின்ற உன்னை,
தஞ்சம் தந்து
அரவணைத்த மண்ணை,
கொஞ்சமேனும்
நெஞ்சமின்றி இன்று,
வஞ்சனைகள்
செய்து கொண்டு நின்று,
கொஞ்சித் தவழும்
பிஞ்சுக் குழந்தை வந்து,
அஞ்சி அருகில்
அணைந்து நின்று கொண்டு,
பதறிக் கொண்டு
கதறி அழும் போதும்,
குதறிக் கொண்டு
கொன்று குவித்து விட்டாய்.
கொஞ்சமேனும்
உன் மனதில்
ஈரம் என்பதில்லையா?
பிஞ்சு மனம்
துடிக்கும் போதும்
ஈவிரக்கமில்லையா?
போர் தர்மம் பேணாமல்
போர் வெறியை மட்டுமேந்தி,
பார் முழுதும் பரிதவிக்க
ஊர் வெறியை ஊட்டி விட்டு,
ஆறாட்டம் ஓடுகின்ற
ரத்தத்தில் சாதனையாய்,
போராட்டம் எனும் பெயரில்
போர்க் கொடுமை புரிகின்றாய்.
அந்நிய மதத்தவருக்கும்
அநியாயம் இழைக்கப்பட்டால்,
திரையின்றி அவர் அழைப்பும்
இறைவன் பால் ஏற்கப்படும்.
இறைவன் பால் இருக்கின்ற
நிறைவான நீதியினை,
மறைவில் நீ ஒளிந்தாலும்
விரைவில் நீ அனுபவிப்பாய்.
அகங்கார வேட்கையினால்
அநியாயம் புரிபவனை,
அகிலத்தின் இரட்சகனே
அடக்கி வைத்து அதிர வைப்பான்.
அல்லாஹ்வின் தீர்ப்புக்காய்
கண் கலங்கிக் கரமேந்தி,
காலமெல்லாம் மனம் உருகி
கண்ணீருடன் காத்திருப்போம்.
தணியாத அநியாயம்
245
previous post