அதிகளவான மழை வீழ்ச்சி மற்றும் அதிகரித்த நீர் மின் உற்பத்தி காரணமாக மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படலாமென, இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.
நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்கள் உள்ள பிரதேசங்களில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், நேற்றைய நிலவரப்படி 96% நீர்த்தேக்கங்கள் கொள்ளளவுக்கு நிரம்பியுள்ளன. இதன் காரணமாக சுமார் 1,200 ஜிகாவாட் மணித்தியாலம் நீர் மின்சாரம் மூலம் சேமிக்கப்பட்டுள்ளது.
தற்போது 65% நீர் மின்சாரம் மூலமும் 17% அனல் மின்சாரம் மூலமும் மின் உற்பத்தி செய்யப்படுவதுடன், புதுப்பிக்கத்தக்க சக்தி 75%ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் மின்சார விநியோகத்தில் 80% புதுப்பிக்கத்தக்க சக்தி மூலமாகவே இடம்பெறுகிறது.
ஆகையால், இது தொடர்பாக உரிய தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.