‘பாராளுமன்றத் தேர்தல்கள் (திருத்தம்)’ சட்டமூலத்தின் பரிசீலனைக்கென நிலையியல் கட்டளையின் 113 (2) இன் பிரகாரம் சட்டவாக்க நிலையியல் குழுவில் சேவையாற்றும் பொருட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை மேலதிக உறுப்பினர்களாக நியமித்துள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (18) பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இதற்கமைய பிரசன்ன ரணதுங்க, சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, கஞ்சன விஜேசேகர, அநுராத ஜயரத்ன, சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, மயந்த திசாநாயக்க மற்றும் ரோஹினீ குமாரி விஜேரத்ன ஆகியோரே இந்தக் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், ‘மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தம்)’ எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென நிலையியல் கட்டளையின் 113 (2) இன் பிரகாரம் சட்டவாக்க நிலையியல் குழுவில் சேவையாற்றும் பொருட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை மேலதிக உறுப்பினர்களாக நியமித்துள்ளதாகவும், சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இதற்கமைய சட்டத்தரணி கலாநிதி சுசில் பிரேமஜயந்த, ஜானக வக்கும்புர, இம்தியாஸ் பாகிர் மாகார், ஆர்.எம்.ரஞ்சித் மத்தும பண்டார, இரான் விக்கிரமரத்ன, இசுரு தொடங்கொட, எம்.டபிள்யூ.டீ.சஹன் பிரதீப் விதான மற்றும் டீ.வீரசிங்க ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளதாகவும், சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.