இலங்கையின் கல்வித் துறையில் முன்னோடியான மைல்கல்லொன்றை Asia Pacific Institute of Information Technology (APIIT) அறிமுகப்படுத்தியுள்ளது. இது செயற்கை நுண்ணறிவின் (AI) ஆற்றலை பிரதானமாகக் கொண்டு மாணவர்களை வலுவூட்டும் புரட்சிகரமான பிரசாரமாகும். எதிர்கால தலைவர்களுக்கு ஊக்கமளித்தல் என்ற இந்த பிரசாரத்தின் பின்னணி இந்த புத்தாக்கம்மிக்க பிரசாரத்தின் மூல எண்ணக்கருவான “எதிர்கால தலைவர்களுக்கு ஊக்கமளித்தல்” என்பதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதொன்றென்பதுடன், இது மாற்றங்களுடன் கூடிய கல்வி அனுபவத்தை வழங்குமென்பதனை உறுதியளிக்கின்றது. தமது சமூகங்களில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் தலைவர்களை உருவாக்கும் பொருட்டு அவர்களை ஊக்குவிக்க மாணவர்கள் வலுவூட்டப்பட வேண்டும் என்ற கோட்பாட்டை APIIT வலியுறுத்துகின்றது.
டிஜிட்டலுக்கு முன்னுரிமையளிக்கும் இந்த சகாப்தத்தில், மாணவர் உள்ளீர்ப்பு செயன்முறையை மீள் வரையறை செய்ய APIIT முன்வந்துள்ளது. இந்த முழுப் பிரசாரமும் செயற்கை நுண்ணறிவு (<!–[if gte mso 9]><![endif]–> கருவிகள் மூலம் APIIT இன் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இது 100% செயற்கை நுண்ணறிவினால் (AI) உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தால் வலுவூட்டப்பட்ட முழுமையான உள்ளீர்ப்பு பிரசாரமே இந்த அர்ப்பணிப்புக்கான சான்றாகும். இம் முயற்சியானது தொழில்நுட்ப வல்லமையைப் பற்றியது மட்டுமல்ல என்பதுடன், இது APIIT மாணவர்கள் அவர்களது எதிர்கால தொழில்சார் பாத்திரங்களில் தம்மை உருவகித்துப் பார்க்க வழிவகுக்கின்றது.