ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் நீரிழிவு விழிப்புணர்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இலாப நோக்கற்ற நிறுவனமான Suwa Diviya, உலக நீரிழிவு மாதத்தை முன்னிட்டு நேற்று 2023 நவம்பர் 4ஆம் திகதி விசேட நிகழ்ச்சியொன்றை இலங்கை மன்றக் கல்லூரியில் ஏற்பாடு செய்தது.
“Unmask Diabetes” எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் நோக்கம் நீரிழிவு நோய், அதன் தடுப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையின் சமூக நோக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாகும். அன்றைய தினம் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொதுமக்களுக்காக இந்த இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
அன்றைய நிகழ்ச்சியானது நீரிழிவு நோய்த் தடுப்பு பற்றிய ஒரு கவர்ந்திழுக்கக் கூடிய விளக்கக்காட்சியுடன் தொடங்கியது, இதில் பங்கேற்பாளர்கள் நீரிழிவு அபாயத்தைக் குறைக்க எடுக்கக்கூடிய நடைமுறைகள் குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவைப் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பிரசித்தி பெற்ற உட்சுரப்பியல் நிபுணரான திருமதி. திமுத்து முத்துகுட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார். நீரிழிவு நோய் குறித்த விரிவான விழிப்புணர்வு அமர்வை அவர் நடத்தினார். இந்த நாட்பட்ட நிலையின் சிக்கல்களை மருத்துவர் முழுமையாக விளக்கி, பங்கேற்பவர்களுக்கு அதைப் பற்றிய சிறந்த புரிதலை வழங்கினார்.
இந்த திட்டத்தில் ஒரு கண் மருத்துவ நிபுணர், சிறுநீரக மருத்துவ நிபுணர், குடும்ப மருத்துவ நிபுணர், ஊட்டச்சத்து நிபுணர் ஆகியோர் அடங்குனர்.
உலக நீரிழிவு மாதம்