557
அமரர் டி.ஏ.ராஜபக்ஷவின் 56ஆவது வருட நினைவுதின நிகழ்வு நேற்று தங்கல்ல, கால்டன் இல்லத்தின் முன்னால் அமைக்கப்பட்டுள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு முன்பாக நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, அமைச்சர் மஹிந்த அமரவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் உட்பட பெருந்திரளானோர் நிகழ்வில் கலந்துகொண்டனர். (படம்:- மெதமுலன குறூப் நிருபர்)