SDB வங்கியானது நிலைபேண்தன்மை மற்றும் சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகைக் கோட்பாடுகள் மீதான அதனது தடையற்ற அர்ப்பணிப்புடன் இணைந்ததாக, தேசிய சக்தி கலவையினுள் புதுப்பிக்கத்தக்க சக்தி ஒருங்கிணைப்பினை ஊக்கப்படுத்துவதனை நோக்கிய முக்கிய தடத்தினை பதித்துள்ளது.
SDB வங்கியின் முயற்சிகளானது 2021 ஆம் ஆண்டு முதல் சூரிய சக்தித் தகடுகளைப் பொருத்துவதற்கான கடன்களை வழங்குதல் மற்றும் ஹேய்லிஸ் பென்டன்ஸின் பங்குடைமையுடன், 2022 ஆம் ஆண்டில் அதனது முதலாவது வர்த்தக அளவீட்டிலான சூரிய சக்தி செயற்றிட்டத்திற்கு வெற்றிகரமாக நிதியளித்தமை என்பவற்றை உள்ளடக்குகின்றது. தற்போது, ஒரு நிலைபேண் நிதிவழங்குனராக அதன் துவக்கங்களிற்கூடாக வங்கியானது சுற்றுச்சூழல் தாக்கங்களை குறைப்பதற்கான பரந்த நிகழ்ச்சித்திட்டமொன்றாக அதற்கு சொந்தமான கட்டிட கட்டுமானங்களை “பசுமை கட்டிடங்களாக” மாற்றத் தலைப்படுகின்றது.
இவ்வாறாக, நிலைபேண்தன்மை குறித்த அதனது அர்ப்பணிப்புக்களை மேம்படுத்தும்முகமாக, SDB வங்கியானது. சமீபத்தில் அதற்கு சொந்தமான ஹொரண மற்றும் கராப்பிடிய கிளை கட்டிங்களின் கூரைகளில் சூரிய சக்தித் தகடுகளைப் பொருத்தியுள்ளது. தேசிய மின்கட்டமைப்புடன் தொடர்புடையதான இச்சூரிய சக்தி உற்பத்தி முறைமைகளை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் முறையான நிகழ்வின் இம்முக்கிய மைற்கல்லானது ஹொரண கிளையில் 26 செப்டெம்பர் 2023 அன்று வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரியந்த தல்வத்த அவர்களது பிரசன்னத்துடன் இடம்பெற்றது.