2023ஆம் ஆண்டு உலக போக்குவரத்து தினத்தை முன்னிட்டு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட மின்சார மற்றும் இலத்திரனியல் போக்குவரத்து தொடர்பான சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாடு எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் 22ஆம், 23ஆம் திகதிகளிலும் ஏப்ரல் 2ஆம் திகதியும் ஹோமாகம, பிட்டிபன பிரதேசத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான உலக போக்குவரத்து தினத்துடன் இணைந்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட (Green Mobility Exhibition and Conference) கண்காட்சி மற்றும் மாநாட்டை எதிர்வரும் நவம்பர் 10ஆம், 11ஆம், 12ஆம் திகதிகளில் ஹோமாகம, பிட்டிபன பிரதேசத்தில் நடத்துவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டது.
அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையிலான ஒருங்கிணைந்த நடவடிக்கை குழுவால் பரிந்துரைக்கப்பட்ட ஆலோசனைக்கமைய பரந்தளவிலான சர்வதேச பங்கேற்பு, பங்களிப்பை பெறுவதற்கு போதிய கால அவகாசத்தை பெறுவதற்காகவே கண்காட்சியை எதிர்வரும் மார்ச்வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.