அபர்தீன் ஹோல்டிங்ஸ் (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமும், இலங்கையின் அலைவு நெளிவுள்ள பொதிகள் உற்பத்தித் துறையில் புகழ்பெற்ற நாமமுமான Ex-Pack Corrugated Cartons PLC, இரண்டாவது வருடமாகவும் காபன் நடுநிலை சான்றிதழைப் பெற்றுள்ளது. அதனூடாக, காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கு அவசியமான செயற்பாடுகள் மீதான தனது ஒப்பற்ற அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்துள்ளது.
தான் இயங்கும் தொழிற்துறையில் வரவேற்கத்தக்க அம்சமாக இந்த சாதனை அமைந்துள்ளது. கடந்த ஆண்டில் 22.3 சதவீதத்தினால் தனது காபன் வெளியீட்டை குறைத்துக் கொள்ள Ex-Pack இனால் முடிந்திருந்தது. நிறுவனத்தின் சகல அம்சங்களையும் இலக்கு வைத்து, தனது வருடாந்த பச்சைஇல்ல வாயு (GHG) வெளியேற்றங்களை குறைத்திருந்தது.
பச்சைஇல்ல வாயு (GHG) மதிப்பீடுகள் அதன் வலு மற்றும் நீர் நுகர்வு, கழி முகாமைத்துவம், போக்குவரத்து மற்றும் அவற்றுடன் தொடர்புடைய விடயங்களிலிருந்து பெறப்பட்டதுடன், தேசிய தூப்புரவாக்கல் தயாரிப்பு நிலையத்தினால் (National Cleaner Production Centre (NCPC)) உறுதி செய்யப்பட்டிருந்தன. தொழிநுட்ப வழிகாட்டல்களை முன்னணி பசுமை கட்டட, MEP வடிவமைப்பு மற்றும் காபன் நடுநிலை ஆலோசனை ஆகியவற்றில் முன்னோடியாக அமைந்துள்ள co-energi இனால் வழங்கப்பட்டிருந்தது. Ex-Packக்கு இந்த சான்றிதழைப் பெற்றுக் கொள்வதில் இது முக்கிய பங்கை ஆற்றியிருந்தது.
காபன் வெளியீடுகளை தணிப்பது மற்றும் பிரதியீடு செய்வது மற்றும் நிலைபேறாண்மை தொடர்பில் தொழிற்துறையின் சிறந்த செயன்முறைகளை பின்பற்றுவது போன்றவற்றை களத்திலுள்ள நிபுணர்களுடன் கலந்தாலோசித்து மேற்கொள்ளும் செயற்பாடுகளை Ex-Pack முன்னெடுக்கின்றது.