படுக்கைகளையும் பறிகொடுத்து
பரபரப்பு பரிதவிப்புடன் – வீதியில்
பட்டினியாக யாசித்தவர்களுக்குப்
பசியினைப் போக்கினீர்கள்
பாகுபாடு இன்றி வாழ்வதற்கான
பாதையை அமைத்துக் கொடுத்தீர்கள்
பண்பாட்டு மிக்க நிலத்தை
படிப்படியாக பறித்துக்கொண்டார்கள்
பாசிச வாதிகளின் இழிவான
படுபாதக செயற்பாடுகளால்
பாவமரியா குழந்தைகள் முதல்
பாசமிக்க மனிதர்கள் வரை
கொன்று குவிக்கப்படும் அவலம்
பாவக்கறைகள் போக்கி அபயமளித்த
பரிசுத்த பூமியில்
பக்குவமாக நிலைகொண்ட
பலமிக்க ஈமானியர்களின்
பக்திமிக்கப் போராட்டத்தில்
பக்கச் சார்பாக செயல்படுகிறது
பச்சோந்தி மேற்குலகம்.
பாரினில் பறந்திருக்கும் முஸ்லிம்கள்
பல முனையில் ஒன்றிணைவதனால்
பாவிகள் நிலை தடுமாறிக் கொண்டு
படுதோல்வியைக் காண்பர்
பாதுகாப்பாக மீளும்
பாக்கியம் பெற்ற அக்ஸா
படைப்பாளிடமிருந்து சுவனத்தை
பரிசாக பெற்றுக் கொள்வார்கள்
பலஸ்தீனியர்கள் –
மஹ்ஷரில்
பாதுகாப்பாக மீளும்
762
previous post