884
நாட்டின் மூத்த நடனக் கலைஞர்களில் ஒருவரான கலாசூரி ரஜினி செல்வநாயகம் தனது 87ஆவது வயதில் நேற்று முன்தினம் (20) இரவு காலமானார். இராஜகிரிய, கலப்பலுவ பிரதேசத்தில் அவர் வசித்து வந்ததுடன், தனது நடனக் கல்லூரியின் மூலம் பெரும் எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு அவர் வழிகாட்டியுள்ளார்.
நீண்ட அனுபவம்மிக்க கலாசூரி, கலா கீர்த்தி ரஜினி செல்வநாயகம், இலங்கையில் கலைத்துறைக்கு அளப்பரிய சேவையை வழங்கியுள்ளதுடன், பல விருதுகளையும் பெற்றுள்ளார்.