காசாவிலுள்ள இலங்கையர்களை பாதுகாக்க வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல்- பலஸ்தீனத்துக்கு இடையில் இடம்பெற்றுவரும் மோதல் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் தொடர்ந்து உரையாற்றிய போது “காசாவில் இடம்பெற்றுவரும் மோதலின் போது, அங்கு பணியாற்றிவந்த களனியைச் சேர்ந்த 49 வயதுடைய அனுலா ஜயதிலக எனும் இலங்கையர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு இலங்கையர் காயமடைந்துள்ளார். இதேவேளை, வென்னப்புவவைச் சேர்ந்த யட்டவர பண்டார எனும் இலங்கையர் அங்கு காணாமல் போயுள்ளதுடன், இவரைக் கண்டுபிடிக்க இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகத்தினூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த மோதலைத் தொடர்ந்து வடக்கு காசாவிலிருந்து தெற்கு காசா நோக்கிச் சென்றவர்களில் 17 இலங்கையர்கள் இருப்பதுடன், அவர்கள் ரபா எல்லை வழியாக எகிப்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
858
previous post