Home » டிஜிட்டல் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு புத்தாக்குனர்களுக்கும் அழைப்பு
Dialog's Innovation Challenge

டிஜிட்டல் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு புத்தாக்குனர்களுக்கும் அழைப்பு

by Damith Pushpika
October 15, 2023 7:06 am 0 comment

இலங்கையின் முதன்மை தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி Dialog Innovation Challenge (டயலொக் புத்தாக்கசவால்) இல் இணையுமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்புவிடுத்துள்ளது.

இது டிஜிட்டல் மாற்றம் மூலம் நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கும் தேசத்தின் டிஜிட்டல் எதிர்காலத்தை உருவாக்குவதற்குமான ஒரு தேசிய முன்னெடுப்பாகும்.

மேற்படி தேசிய முன்னெடுப்பானது தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் மூலம் இலங்கையின் தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் சமூகங்களின் வாழ்வை வளப்படுத்துவதற்கான பொதுவான இலக்கை நோக்கி அவர்களின் புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றலை வழிநடத்துவதற்கு நாட்டின் சிறந்த சிந்தனையாளர்களையும் தொலைநோக்குப் பார்வையாளர்களையும் அழைக்கின்றது.

முன்மொழியப்படும் தீர்வுகள் புதுமையின் கலங்கரை விளக்கமாக அமைவதுடன், சந்தையை மறு வடிவமைக்கின்ற அல்லது ஏற்கனவே உள்ள செயல்முறைகளை உயர்த்தும் திறன் கொண்டதாகவிருத்தல் வேண்டும்.

பங்கேற்பாளர்கள் முடிவின் எந்த நிலையிலும் உள்ள தீர்வுகளை சமர்ப்பிக்கலாம். அது ஒரு முன்மாதிரி, குறைந்த பட்ச சாத்தியமான தயாரிப்பு அல்லது முழுமை பெற்ற தீர்வாக அமையலாம். AI, machine learning, IoT, computer vision, blockchain, data analytics, robotics மற்றும் cloud computingஇதுபோன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் மாற்றும் சக்தியை பங்கேற்பாளர்கள் மாற்றத்திற்கான வினையூக்கிகளாகப் பயன்படுத்துவதால், இத் தீர்வுகளின் நோக்கத்தை எந்த வரம்புகளும் கட்டுப்படுத்தாது.

16 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களும் https://dialog.lk/ic பார்வையிடுவதன் மூலம் தனிநபர்களாகவோ அல்லது மாறும் ஆற்றல் சார்ந்த அணிகளாகவோ பங்கேற்கலாம்.

இந்த தேசிய முன்னெடுப்பின் வெற்றியாளர்களுக்கு பெறுமதியான வெகுமதிகள் காத்திருக்கின்றன.

அதற்கமைய விலை மதிப்பற்ற வழிகாட்டல் மற்றும் டயலொக்கின் விரிவான புத்தாக்க சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் வளங்களுக்கான அணுகலுடன் ரூ. 5 மில்லியன் பணப் பரிசு வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division