இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Cool Water நிறுவனமானது, தனது வணிக நாமத்தின் விளம்பர முகவராக இலங்கை கபடி அணியின் தலைவரும், நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட வீரரும், நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலையின்) விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பு ஆசிரியருமான எம்.ரி. அஸ்லம் சஜாவினை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்த நிகழ்வானது அண்மையில் Cool Water நிறுவனத்தின் காரியாலயத்தில் அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எம். காசிம் தலைமையில் இடம்பெற்றது.
இலங்கை கபடி தேசிய அணியின் தலைவரான அஸ்லம் சஜா, இலங்கை மண்ணின் புகழை சர்வதேசமெங்கும் கொண்டு செல்கின்றமையினால், இலங்கை பெருமையடைவதுடன், இந்த ஒப்பந்தத்தின் மூலம் அஸ்லம் சஜாவின் கபடி விளையாட்டிற்கு தேவையான முழு வசதிகளையும் வழங்க Cool Water நிறுவனம் முன்வந்துள்ளது
அத்துடன் அஸ்லம் சஜாவிற்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இடம்பெறும் கபடி போட்டிகளில் பங்குபற்றுவதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு Cool Water நிறுவனம் ஒப்பந்தமும் செய்துள்ளது.
(நிந்தவூர் குறூப் நிருபர் - சுலைமான் றாபி)