வறண்டு போன
பாலைவனம் போல
வறுமை நிறம் சிவந்து நிற்க
இருண்டு போன
நிழல்ச்சோலை
அந்த வேம்புமரம்
என்னைத் தாங்கும் மரம்…
வேப்பம் பழத்தின்
விதைகளைச்
சாப்பிடுவதுபோல….
எனது ஒவ்வொரு நிமிடமும்
கலைந்து செல்லும்
நீரற்ற பயிர் போன்றது
அந்தக் காலம்
ஏழ்மையும் ஏக்கமும்
என்னை ஏளனம் செய்யும்
தூய நட்புக் கூட
உப்பாய்க் கரைந்து போகும்
சொந்தங்கள் பந்தங்கள்
சோதிக்க வரும்
வாய் மொழி மறந்தவளாய்
வார்த்தைகள்
தொலைந்தவளாய்
அந்த வேம்புமர நிழலில்
சாய்ந்திருப்பேன்
வேப்பங்குச்சிகள் – என்
விரல்களுக்கிடையில்
பேனாவாய் மாறும்
அந்த மண்ணில்
கவிகள் தீட்டும்
வேப்பம் மலர்கள்
கவிவரிகளை மூடும்
இயற்கையின்
இதமான தென்றல்
வேப்பம் மரத்தில்
முட்டி – என்
கன்னங்களைத்
தழுவிச் செல்லும்!
வேப்பங் கிளைகள்
சலசலக்கும்!
பறவைகள் குந்தி
கலகலக்கும்!
காகமும் குயிலும்
போரடிக்கும்
கனிவும் குரலும்
ஜோராயிருக்கும்
அது ஒரு காலம்
835
previous post