816
மகாவலி ஆறு ஊடறுக்கும்
முனையில் கடல் கலக்கும்,
தலைமைத்துவம் பேசி
சமூகத்தை ஏமாற்றும் மந்திரம்.
மந்திரியின் வாகனங்கள்
கால்தூக்கி பறக்கும் தந்திரம்
இளைப்பாற வரும் இளமைக்கு
இழவு தெரியாது காற்று வீசட்டும்.
இயலாமை என்று பேசிட்டோம்
இறுதியில் மை பூசிட்டோம்.
மணலை விழுங்கியது
நெய்தல்,
அணைக்கட்டுமில்லாது
அரிக்கட்டும்.
குறிஞ்சாக்கேணி பாலத்தின்
ஓலத்தில் கண்டு கொள்ளும்
கோஷம் சொல்லிட்டோம்.
பல்கலைக்கழக கல்லூரி
காட்டட்டும்
அடிக்கல்லுடன் முல்லையாகட்டும்
எல்லை இடப்படாமலே…
செல்லட்டும்
ஆழியின் பழி தீர்க்கும்
வழிமுறைக்கு
வடிவமைக்க உப்பு சேர்த்து
விடட்டும்.