935
நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பமாகி நடைபெறுகின்றது. இந்நிலையில், பரீட்சை வினாத்தாள்களை பரீட்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது. அனர்த்த நிலைமைகள் ஏற்படும் இடங்களிலுள்ள அனைத்து பரீட்சார்த்திகளும் அருகிலுள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக, பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் லசிக சமரகோன் தெரிவித்தார். இம்முறை தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சையானது நாடளாவிய ரீதியில் 2,888 பரீட்சை நிலையங்களில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.