விடியலுக்காக காத்துக்கிடந்த தமிழ்ச் சமூகத்தில் திராவிட சூரியனாய் உதித்து தமிழுக்காகவும் தமிழருக்காவும் காலமெல்லாம் உழைத்த கலைஞர் மு.கருணாநிதியின் நுாற்றாண்டு கௌரவிப்பு விழா எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் வாரத்தில் கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் ஊடக அனுசரணையுடன் நடைபெறவுள்ள கலைஞர் கருணாநிதி நுாற்றாண்டு கௌரவிப்பு விழாவையிட்டு 100 பிரமுகர்களை கௌரவிக்க சங்கவி பிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சங்கவி பிலிம்ஸ் நிறுவனமானது தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் ஊடக அனுசரணையுடன் நாடளாவிய ரீதியில் இதுவரை 1,000 பிரமுகர்களை கௌரவித்துள்ளது.
கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக சேவையாளர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகள் என பலதரப்பட்டவர்களும் இவ்விழாவில் கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.