இலங்கையில் Honor ஸ்மார்ட் ஃபோன்களின் பிரத்தியேக விநியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ள சிங்கர், புதிய Honor ஸ்மார்ட் ஃபோன் தெரிவுகளை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு சகாயமான, நவீன தொழில்நுட்பத்திலமைந்த, அதிகளவு எதிர்பார்க்கப்பட்ட Honor ஸ்மார்ட்ஃபோன்கள் வழங்கப்பட்டுள்ளன.
சீனாவின் முதல் தர அன்ட்ரொயிட் ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தியாளரிடமிருந்து, ஸ்மார்ட்ஃபோன் புத்தாக்கம் வெளிப்படுத்தப்பட்டு, புதிய Honor 90 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள நடுத்தர அளவிலான ஸ்மார்ட்ஃபோன் பாவனையாளர்களின் மொபைல் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இந்த தொலைபேசி வகை அமைந்திருக்கும். ரூ. 149,999 எனும் வகையில் Honor 90 தெரிவு அறிமுகத்துடன், இலங்கையில் இந்த வகை ஸ்மார்ட்ஃபோன் தெரிவுகள் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.
H90 இன் பிரதான உள்ளம்சமாக, அதன் மூன்று – லென்ஸ் பின்புற கமரா கட்டமைப்பு அமைந்துள்ளது. இதில் 200-megapixel பிரதான உணரி காணப்படுகின்றது. நவீன கமரா கட்டமைப்பினூடாக, பாவனையாளர்களுக்கு காட்சியமைப்புகளை தெளிவாக பதிவு செய்து கொள்ள முடியும். தெட்டத் தெளிவான வீடியோ அழைப்புகள் மற்றும் எடுப்பான செல்ஃபிகளுக்கு Honor 90 இல் 50 மெகாபிக்சல் முன்புற கமரா காணப்படுகின்றது. இணைப்பில் இருப்பதற்கும், நினைவிலிருக்கும் தருணங்களை பகிர்ந்து கொள்வதற்கும் இது உதவியாக அமைந்திருக்கும்.