களிப்பூட்டும் மற்றும் புத்தாக்கமான புதிய சேவை வழங்கல்களை எதிர்பார்க்கும் இளம் பாவனையாளர்கள் மற்றும் சகல குடும்ப அங்கத்தவர்களின் அர்ப்பணிப்பை கௌரவித்து, தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, தனது ஹோம் புரோட்பான்ட் பாவனையாளர்களுக்கு நம்பமுடியாத களிப்பூட்டும் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதற்காக புதிய ‘7xFun’ Add-on data bundle ஐ அறிமுகம் செய்துள்ளது.
YouTube, Viber, WhatsApp, Facebook, IMO, Instagram மற்றும் TikTok போன்ற சமூக ஊடக கட்டமைப்புகளுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட add-on data bundle ஆக அமைந்திருப்பதுடன், இளம் வயதினர் மற்றும் குடும்பத்தாருக்கு வலுச்சேர்க்கப்படுகின்றது. SLT-MOBITEL’இன் 7xFun add-on என்பது 20GB மீளத் தொடரும் டேட்டா பண்டலாக அமைந்திருப்பதுடன், ஏழு நாட்களுக்கு செல்லுபடியாகும். ரூ. 195 எனும் சகாய விலையில் ஏழு அப்ளிகேஷன்களை பயன்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது. மேலும், SLT-MOBITEL ஹோம் புரோட்பான்ட் பாவனையாளர்கள், அடிப்படை புரோட்பான்ட் பக்கேஜ்களுக்கு பதிவு செய்து கொண்டு, data add-ons ஐ கொள்வனவு செய்யலாம். Data add-ons மீள தொடர்வதாக அமைந்திருப்பதுடன், எந்நேரத்திலும் பதிவு நீக்கம் செய்து கொள்ளலாம். இளம் வாடிக்கையாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் தற்போது தமக்கு பிடித்த சமூக ஊடக அப்ளிகேஷன்களை SLT-MOBITEL 7xFun Add-on data bundle க்கு பதிவு செய்து கொண்டு அனுபவித்து மகிழலாம். இலகுவாக செயற்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் சிக்கல்களற்ற SLT-MOBITEL 7xFun add-on data bundle ஊடாக, தினசரி வாழ்க்கைக்கு அவசியமான இணைய வசதி வழங்கப்படுகின்றது.