கன்னக் குழிகள்
முகப்பருக்கள்
வெளியில் தெரிவது போல்
உள்ளத்து வழுக்கள்
எண்ணக் கருக்கள்
யாருக்கும் புரிவதில்லை
ஊனமான உள்ளத்தின்
ஈனச் செயல்கள்
ஏமாற்றிய வசைகள்
வாழ்வின் வடுக்கள்
அரசியல் அசிங்கங்கள்
கழிவறைக் குழிகள்
மாணிக்க கல் தங்கக் கடல்
செழிப்பான உழைப்பு
சோரம் போன பிழைப்பு
பதுக்கிய வரிகள்
பரிதாப அழிவுகள்
சங்கமமான சவக்குழிகள்
உக்கிர வன்மம்
வக்கிர வன்புணர்வு
சிதையும் கருக்கள்
புதையும் பெண்மை
தடயங்கள் சிவந்த மண்ணில்
மனிதப் புதை குழிகள்
பேசாத உண்மைகள்
ஒழிந்து போகட்டுமென
பழி போட்டு வழி காட்டும்
கிழிந்த முகவரிகள்
அழிந்து அனைவரும்
அடைக்கலமாகும்
நிரந்தர நரகக் குழிகள்
அபலையின் விழிகளில்
சாபமிடும் மெளன வேதனைகள்
காளையரின் ஆண்மையில்
ஆழமான குழிகள்
சீழ் வடியும் குருதி நிரம்பி
வழிந்தோடும் இதயக் குழிகள் !
இதயக் குழிகள்
1.3K
previous post