1.3K
2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரி மாளிகையில் இன்று (01) நடைபெறும். இன்று முற்பகல் 10.00 மணிக்கு நடைபெறும் சிறுவர் தின நிகழ்வின் கருப்பொருள் ‘குழந்தைகள் எல்லாவற்றையும் விட விலைமதிப்பற்றவர்கள்’ என்பதாகும்.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சும் பிரதமர் அலுவலகமும் இணைந்து நடத்தும் இந்நிகழ்வில், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்கவும் பங்கேற்கிறார்.
இதேவேளை, இந்த ஆண்டுக்கான முதியோர் தினத்தின் கருப்பொருள் ‘மாறும் உலகில் முதியோர்களின் பின்னடைவு’ என்பதாகும்.