கூட்டாண்மை வங்கியியல் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் அமானா வங்கி அண்மையில் தனது கூட்டாண்மை வங்கியியல் அலுவலகத்தை இடமாற்றம் செய்திருந்தது.
புதிய வளாகத்தின் திறப்பு நிகழ்வில் அமானா வங்கியின் தவிசாளர் அஸ்கி அக்பராலி, முகாமைத்துவ பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர், பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் தில்ஷான் ஹெட்டியாரச்சி, திஷான் சுபசிங்க மற்றும் மொஹமட் ஆடமலி, வியாபார வங்கியியல் பிரிவின் உப தலைவர் இர்ஷாத் இக்பால், உதவி உப தலைவர் மற்றும் கூட்டாண்மை வங்கிப் பிரிவின் தலைமை அதிகாரி ரஜேந்திர ஜயசிங்க மற்றும் முகாமைத்துவ குழுவின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கொழும்பு 3, காலி வீதியில் அமைந்துள்ள, அமானா வங்கியின் பிரதான கிளையின் 5ஆம் மற்றும் 6ஆம் மாடிகளில் அமைந்துள்ள புதிய கூட்டாண்மை அலுவலகத்தினூடாக ஒப்பற்ற சௌகரியம் மற்றும் செயற்பாடுகள் போன்றன பிரதிபலிக்கப்பட்டுள்ளன.
பிரத்தியேகமான வங்கியியல் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான வங்கியின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், புதிய வளாகத்தில் மாநாட்டு அறைகள் மற்றும் பிரத்தியேக சந்திப்புப் பகுதிகள் போன்றன அமைந்துள்ளதுடன், இரகசியத்தன்மை வாய்ந்த கலந்துரையாடல்களை முன்னெடுக்க உதவும் வகையில் அமைந்துள்ளன.