1.7K
உனைக் காணாத நாளெதுவும் அமாவாசைதான்!
என் நினைவெல்லாம் உன்னழகு பாசைதான்!
விழிகளிரண்டும் உன்னசைவைத் தேடியே இசைகின்றன!
அதனால் உறங்காமல் எந்நாளும் அசைகின்றன!
காதல் கொண்ட மனசு அழகுதான்!
அதற்காய் சாதல் கூடத் தூசுதான்!
வசைபாடும் உள்ளங்கள் புகழ் பாடுவதில்லை!
நல்லார் அன்பு கண்டு குதூகலிப்பதுமில்லை!
மனதில் கயமைகொள்வார் விழிகள் உறங்குவதில்லை!
அயலார் காதல் கண்டு மகிழ்வதுமில்லை!
– ஜவ்ஹர் கிண்ணியா