சுற்றுலா செல்வதற்குத் தகுதியான நாடுகளில் இலங்கை ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.உலகப் புகழ்பெற்ற சர்வதேச ஊடக நிறுவனமான பி.பி.சி. 25 நாடுகளைத் தேர்ந்தெடுத்து இவ்வாறு வகைப்படுத்தியுள்ளது.இதில், இலங்கை ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
பி.பி.சி அலைவரிசை ஒரு புதிய சுற்றுலா பயண வழிகாட்டியை வெளியிட்டு இதை வகைப்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகளுக்காக பிபிசி இந்த ஆண்டு தனது முதல் வழிகாட்டியை வெளியிட்டுள்ளது. இந்த கௌரவத்தை அந்த அலை வரிசை இலங்கைக்கு வழங்கியிருப்பது சிறப்பம்சமாகும்.
சுற்றுலாப் பயணிகளை வரவேற்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஒரு தனித்துவமான பயண அனுபவத்தையும் இலங்கை வழங்குவதாக அந்த வழிகாட்டியில் பிபிசி மேலும்தெரிவித்துள்ளது.
பிபிசி வெளியிட்டுள்ள இந்த தரவரிசைப்படி, உலகில் சுற்றுலாசெல்ல சிறந்த இடங்களில் டொமினிகா ( முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடம் ஜப்பானிலுள்ள (Naoshima )நவோஷிமாவுக்கும், மூன்றாவது இடம் இத்தாலியிலுள்ள டோலோமைட்ஸ் மலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
தரவரிசையில் 25ஆவது இடம் அல்லது கடைசி இடம், நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.