தரமற்ற ஊசி மருந்து இறக்குமதி சம்பவத்தின் சந்தேக நபரான முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் குடும்ப உறுப்பினர்களின், வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கிணங்க முடக்கப்பட்ட 16 பேரின் கணக்குகள் ஏப்ரல் (02) வரை நீடிக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தால் இடைநிறுத்தப்பட்ட இவர்களின் கணக்குகள் மற்றும் காப்புறுதிக் கொள்கைகளின் பெறுமதி 93.125 மில்லியன் ரூபாவாகும்.
கெஹலிய ரம்புக்வெல்லவின் மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோரின் 16 நிலையான வைப்புக் கணக்குகளும் மூன்று காப்புறுதிகளுமேே முடக்கப்பட்டுள்ளன.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.