சமூகத்தில் இனங்காணப்பட்ட சாதனையாளர்களை சர்வதேச விருதுகள் வழங்கி கௌரவிக்கும் மகத்தான ஒரு பணியை BGIA மேற்கொண்டு வருகின்றது. இந்த சர்வதேச விருதுகள் உலகளவில் போற்றப்படுகின்றன. சமூகத் தொண்டாளர்கள், வளர்ந்து வளரும் தொழில் முனைவர்கள், கலாசார மற்றும் கலைத் துறையில் சாதனை படைத்தவர்கள் மற்றும் சுகாதார துறைகளில் இருந்து சமூகத்திற்கு சிறந்த பங்களிப்பு செய்தவர்களை கௌரவிக்கும் இம் மாபெரும் விருது வழங்கும் வைபவம் கொழும்பு BMICH இல் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சமூகத்தில் ஆக்கபூர்வமான மாற்றங்களை ஏற்படுத்திய சமூகத் தலைவர்கள் கௌரவப்படுத்தப்பட்டனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வாமதேவ தியாகேந்திரன், இந்தியாவின் பெங்களூரில் உள்ள ஆஸ்டர் குழும மருத்துவமனைகளின் சர்வதேச உறவுகளின் பிராந்தியத் தலைவர் அர்பன் சட்டர்ஜி மற்றும் த ஹோப் மெடிக்கல் சர்விசஸ் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளரும் , ஆஸ்டர் குழும மருத்துவமனைகளின் இலங்கைக்கான பிராந்திய பிரதிநிதியுமான சியாஸ் ஷதுருதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களின் இந்த பங்குபற்றுதலினால் இந்த விழா சர்வதேச அளவில் பாரியதொரு புகழை ஏற்படுத்தி இருக்கிறது. என்பதை கோடிட்டு காட்டியதாக அமைந்திருந்தது.
இதில் அதிதியாக கலந்து கொண்ட வாமதேவ தியாகேந்திரன் உடல் ஊனமுற்ற குழந்தைகளை ஊக்குவிக்கும் முகமாக 10,000 ரூபாய் வீதம் வாழ்வாதார உதவித் தொகைகளை வழங்கி வைத்தார்.
அர்பன் சட்டர்ஜி மற்றும் சியாஸ் ஷாருதீன் ஆகியோர் விழாவை மிக கோலாகலமாக ஏற்பாடு செய்த BGIA நிறுவனத்தின் உபதலைவர் டாக்டர் எஃப். எம். ஷரிக்கையும் நிறுவனத்தின் தேசிய அமைப்பாளர் ஹிஷாம் சுஹைலையும் மனப்பூர்வமாக பாராட்டியதோடு அவர்களுக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர். இலங்கையிலிருந்து இந்தியாவுக்காக மருத்துவ சிகிச்சைக்காக வருகின்றவர்களுக்கு சர்வதேச தரம் வாய்ந்த மருத்துவ சுகாதார சேவைகளை வழங்குவதற்காக தன்னை அர்ப்பணிக்கப் போவதாக ஆஸ்டர் குழுமத்தின் சர்வதேச முகாமையாளர் ஆர்பன் சட்டர்ஜி விழாவில் உரையாற்றும் பொழுது தெரிவித்தார். அத்தோடு இன்றைய தினம் கௌரவிக்கப்படுகின்ற அனைத்து சாதனையாளர்களுக்கும் தனது இதயபூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். BGIA சர்வதேச விருதுகளானது வெறும் சாதனையாளர்களை இனங்காட்டுவதோடு மட்டும் நின்று விடாமல், அவர்களை கௌரவிப்பதற்கு அப்பால் சமூகத்தில் ஏற்றபடி மாற்றங்களை உருவாக்கி சமூகம் தனிச்சையாக அடுத்த தளத்தை நோக்கி நகரத்தக்கதாக வழிகாட்டுகிறது. இந்த வகையிலே சமூகத்தை நெறியாள்கைப்படுத்துகின்ற சமூகத் தலைவர்களை இனம் கண்டு அவர்களின் எதிர்காலத்திற்கான வழிகாட்டல்களை வழங்குகின்ற ஒரு உந்துதலையும் அளித்து எதிர்காலத்திலே இந்த இலங்கை தேசத்தை நிர்மாணிக்க போகின்ற இந்தத் தலைவர்கள் பல்துறை ஆற்றல்மிக்க தலைவர்களாக பரிணமிக்க செய்ய வேண்டும் என்கின்ற தூர தரிசனத்தோடு தான் இவ்வாறான விருது வழங்கும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறது என்பதையும் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறது.