Baurs என அறியப்படும் A. Baur & Co. (Pvt.) Ltd., 127 வருட காலமாக இலங்கையின் பொருளாதாரத்துக்கு சிறந்த பங்களிப்புகளை வழங்கி வருகின்றமைக்காக கீர்த்திநாமத்தைப் பெற்றுள்ளது. நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரொல்ஃப் பிளாசர் மற்றும் சிறந்த முகாமைத்துவ அணியினருக்கு, அண்மையில் கொழும்பு ITC Ratnadipa ஹோட்டலில் நடைபெற்ற Global CEO தலைமைத்துவ சிறப்பு விருதுகளில் கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளாசருடன், Baurs இன் சிரேஷ்ட முகாமைத்துவ அணியினரும் திரண்ட தலைமைத்துவத்துக்கான கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டனர். கடந்த நான்கு வருட காலப்பகுதியில் கொவிட்-19 தொற்றுப் பரவல், சமூக-பொருளாதார நெருக்கடி மற்றும் பரந்த பொருளாதார பிரச்சினைகள் போன்ற நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த சூழலில் நிறுவனத்தை வழிநடத்தியதில் இவர்கள் முக்கிய பங்காற்றியிருந்தனர்.
Baurs இன் நிலைபேறான வளர்ச்சி மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்கின்றமையை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டிருந்தது.
Baurs இன் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும் மீண்டெழும் திறன், இணைந்த செயற்பாடு மற்றும் தூர நோக்குடைய வழிமுறை போன்றவற்றை இந்த விருது உறுதி செய்திருந்தது.
பல்வேறு வியாபாரங்களில் முன்னிலையில் திகழ்கின்றது. திரண்ட தலைமைத்துவத்தின் வலிமையுடன் வெற்றிகரமான செயற்பாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இந்த விருது அமைந்துள்ளது.