உள்ளூராட்சி சபைத் தேர்தல் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் நடத்தப்படுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய வேட்பு மனுக்கள் கோரப்பட்டு இத்தேர்தல் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதுபற்றித் தெரிவித்த ஜனாதிபதி:
கடந்த வருடம் மார்ச் மாதம் உள்ளூராட்சித் தேர்தலுக்கு வேட்புமனுக்கள் கோரப்பட்டிருந்தன. எனினும், தற்போது சில நிலைமைகள் மாறியுள்ளன. இதனால் பழைய வேட்புமனுவை இரத்துச் செய்து மீண்டும் வேட்புமனுக்களை கோரப்படும். அமைச்சரவையின் தீர்மானத்தின் பிரகாரம் வேட்புமனுவை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் இது சமர்ப்பிக்கப்படும். சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் வேட்புமனுக்கள் கோரப்பட்டு புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படும். மாகாண சபைத் தேர்தலும் அடுத்த வருடம் நடத்தப்படுமென எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். மல்வத்து அஸ்கிரி மகாநாயக்கர்களிடம் ஆசி பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.