ஆலமர நிழலிலே
ஆறுதலாய் ஒக்கார்ந்தே
சலசலக்கும் ஓடையிலே
கலகலக்கும் வளையலுடன்
தண்ணியள்ளி நீ
தெளிக்கையிலே பெண்ணே
சந்தோசப்பட்டே ஒன்
மடியிலே சரிகின்றேனே
ஆயிரம் வார்த்தைகளை
ஒன்னுடன் பேசவே
வயலுக்குள்ளே பொம்மையாட்டம்
அசையாமல் நிற்கையிலே
பக்கத்தில் வந்ததும்
இமையசைத்தே துரத்துகையில்
காதல் துளிர்க்குமே
நெற்கதிரும் அசையுமே
தொட்டாச்சிணுங்கியாய் நாணுகிறாயே
என்னையே ஆளுகிறாயே
தூக்கணாங் குருவியாய்
எனக்குள்ளே வாழ்கிறியே
ஒன் சொப்பனத்தில்
நான் களித்தே
ஒன் நெனவுகளில்
என்னைத் தொலைத்தே
நடைப்பிணமாய் வாழ்கின்றேனே
தாரமாகும் நாள்வரை
வாைழமரத் தண்டே
மரிக்கொழுந்து செண்டே
என்னை ஒனதாக்கு
வாழ்நாளை வசந்தமாக்குவோம்..!
வாைழமரத் தண்டே மரிக்கொழுந்து செண்டே..!
8