சபாநாயகர் அசோக்க ரன்வலவின் இராஜினாமாவை தான் ஏற்றுக்கொண்டதாக, ஜனாதிபதியின் செயலாளர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எழுத்து மூலம் அறிவித்துள்ளார். அதன்படி, செவ்வாயன்று புதிய சபாநாயகர் தெரிவு இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்ட அசோக்க ரன்வல, தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் அறிவித்திருந்தார்.
அரசியலமைப்பின் 64 (2) யாப்புக்கமைய சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகிய எந்தவொரு பதவியிலிருந்தும் இராஜினாமாச் செய்வதாயின், அதனை தன் கையொப்பத்துடனான கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு அறிவிக்க வேண்டும்.
அதற்கமைய, ஜனாபதியின் செயலாளரினால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு இந்த எழுத்துமூலமான அறிவித்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.