15
தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் பதவியிலிருந்து எம்.ஏ. சுமந்திரன் விரைவில் விலகுவாரென தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் அன்பின் செல்வேஸ் தெரிவித்துள்ளார்.
மக்களின் வாக்குகளை பெறத் தவறிய சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் எந்தவொரு பதவியையும் வகிக்க மாட்டாரென அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் அடுத்த தேர்தல்களிலும் போட்டியிடக் கூடாதென சுமந்திரன் கூறியிருந்தாதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார் செல்வேஸ், சுமந்திரன் கூறியதை உறுதியாக கடைபிடிக்கக் கூடியவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.