நானும் நீயும் இன்று
தேசமைந்தர்களாய்
தேசத்தில் ஒன்று!
தேசத்தை நேசித்து
தேசத்தை
விசுவாசித்து
தேசமக்கள் சக்தியோடு
தேசிய உணர்வுடன்
நாம்
நம் தேசத்தில்
இணைந்து கொண்டோம்!
இதனால்
நானும் நீயும்
ஒன்றாகி விட்டோம்!
ஆமாம்;
நான் உன்னை
என்னாய்
காண்கிறேன்!
என்னை நீ
உன்னைக்
காண்கிறாய்!
இதனால் இன்று
நம்மிடையே
சமத்துவம்
மலர்கிறது!
சகவாழ்வு
கிடைக்கிறது!
நீதி தலை
நிமிர்வதால்
அநீதி
தலை குனிகிறது!
இனபேதமும்
மனபேதமும்
நமக்குள்
இல்லாமலாகி
மனிதத்துவமும்
புனிதத்துவமும்
இந்த மண்ணில்
மணக்கிறது!
ஊழலும் இலஞ்சமும்
ஒழிந்து போவதால்
நம்நாடு
உயர்வு பெறுகிறது!
வளமான நாட்டில்
அழகான வாழ்க்கை
நமக்கு
நலமாக கிடைக்கிறது!
நானும் நீயும்
நல்லரசுடன் இணைந்து
நாட்டுக்காக
வாழ்வோம்!
நம்மை நாமே
நாளும்
ஆள்வோம்!
வாழ்வில்
மாற்றம் காண்போம்!
மறுமலர்ச்சி
அடைவோம்!
–