வடிவம் இல்லாப் பூதமெனும்
வையம் ஆளும் நீருற்றே
படரும் மேகக் கூட்டத்தில்
படிமம் சேர்த்து நீயுமிங்கே
சுடரின் ஒளியை மறைத்திட்டு
சூழ்ந்து கொண்டு நிலமீது
தொடரும் மழையாய்
இறங்கித்தானாட
தரணி தாகம் தீர்க்கின்றாய்!
நாளும் நல்ல சுவாசமெலாம்
நம்மைச் சுற்றி இருந்தெங்கும்
வாழும் உயிர்கள் நலமோங்க
வானில் இருந்து வந்திறங்கி
வீழும் துளிகள் எல்லாமும்
விளைச்சல் செழிக்க
உதவிடுமே
தாழ்வும் உயர்வும் இல்லாமல்
தானம் செய்து சிறக்கின்றாய்
பச்சை திரையைய்
போட்டிங்கே
படர்ந்து வளர்ந்த மரங்களுக்கே
நிச்ச யம்நீ மழையென்னும்
நீராய் இறங்கி வருகின்றாய்
மிச்சை செயலால்
இயற்கையுமே
மிகுதி இன்றிச் செய்கின்றோம்
உச்சம் தொடவே மரங்களுமே
உறுதி பூண்டு வளர்ப்போமே