தமது கல்வித் தகைமை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லையென சபாநாயகர் அசோக்க ரன்வல தெரிவித்துள்ளார். சபாநாயகரின் பட்டப்படிப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.இதையடுத்து அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தையும், ஜப்பானில் கலாநிதி பட்டத்தையும் பெற்றுக்கொண்டுள்ளதாக சபாநாயகர் அசோக்க ரன்வல தெரிவித்துள்ளார்.
தமக்கும் கட்சிக்கும் அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு பிரசாரம் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.