சிவப்பு சீனிக்கான வற் வரியை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படுமென கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் (06) உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில், தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் போது, ஒரு கிலோ சிவப்பு சீனி 300 ரூபாவாகவும் சந்தையில் ஒரு கிலோ வெள்ளை சீனி 220 ரூபாவாகவும் காணப்படுகின்றன.
எனினும், இறக்குமதி செய்யப்படும் வெள்ளைச் சீனிக்கு வற் வரி அறவிடப்படுவதில்லை. ஆனால், நாட்டுக்குள் உற்பத்தி செய்யப்படும் பழுப்பு சர்க்கரைக்கு 18 சதவீதம் வற் மற்றும் 2.5 சதவீதம் வரியும் விதிக்கப்படுகிறது. சிவப்பு சீனி அத்தியாவசியமற்ற பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.இறக்குமதி செய்யப்படும் வெள்ளைச் சீனி அத்தியாவசியப் பொருளாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.