செலான் வங்கி, Kedalla Art of Living 2024 உடன் தொடர்ந்து 12ஆவது தடவையாக Title Partnerஆக இணைவதில் பெருமிதம் கொள்கிறது.
Asia Exhibition and Conventions Pvt Ltdஆல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Kedella Art of Living Expo, தொடர்ந்து 18 ஆண்டுகளாக வாழ்க்கை முறை சார்ந்த இலங்கையின் முதற்தர கண்காட்சியாக இருந்து வருகிறது.
இவ்வாண்டிற்கான கண்காட்சி நவம்பர் 29 முதல் டிசம்பர் 1, 2024 வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இது பார்வையாளர்களுக்கு கட்டுமானம், வீட்டு மேம்பாடு அல்லது உட்புற வடிவமைப்பிற்கு தேவையான பல்வேறு வகையான வாழ்க்கை முறை சார்ந்த தயாரிப்புகள், சேவைகள் மற்றும் பொருட்களை ஆராய ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.
செலான் வங்கியானது இந்நிகழ்வில் பல தரப்பட்ட வங்கித் தீர்வுகளை தனிப்பயனாக்கப்பட்ட விதத்தில் வழங்கும் ஓர் ஆலோசகராக கலந்துகொள்ளும். வீடமைப்பு மற்றும் தனிநபர் கடன்கள், குத்தகை வசதிகள், கடனட்டைகள், நடைமுறை மற்றும் சேமிப்பு கணக்குகள் மற்றும் சூரிய மின்சக்தி கடன்கள் (solar loans) ஆகியவை இதில் உள்ளடங்கும்.
வாடிக்கையாளர்களின் தேவை யை நிவர்த்தி செய்து, ஒப்பிடமுடியாத வாடிக்கையாளர் சேவையுடன் கூடிய எளிமையான தீர்வுகளை வழங்கும் வங்கியின் நோக்கத்தை இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது. Kedella Art of Living 2024 Expo, வீடமைப்பு மற்றும் real estate நிபுணர்களை ஒன்றிணைக்கும் தளம் ஆகும்.