செலான் வங்கி அண்மையில் தனது ஹம்பாந்தோட்டை கிளையின் செயற்பாடுகளை இடமாற்றம் செய்தது. செலான் வங்கியின் இடமாற்றப்பட்ட ஹம்பாந்தோட்டை கிளையின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக உதவி பொது முகாமையாளர் ருவன் பெர்னாண்டோ மற்றும் பிராந்திய முகாமையாளர் (தெற்கு) லலந்த பெர்னாண்டோ மற்றும் கிளை முகாமையாளர் திரு.மாலக தனபால ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு 2024 ஒக்டோபர் 21ஆம் திகதி இலக்கம் 53, வில்மட் வீதி, ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்றது. இவ் இடமாற்றம் வாடிக்கையாளர் சேவையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு மூலோபாய முடிவாகும்.
திரு.ருவன் பெர்னாண்டோ, ஹம்பாந்தோட்டையின் வர்த்தக மேம்பாட்டிற்கு செலான் வங்கியின் பங்களிப்பு மற்றும் அதன் வாடிக்கையாளர்களுக்கு செயற்பாட்டு திறன் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் முயற்சிகளை இந்த இடமாற்றம் வலியுறுத்துகிறது என்று தனது உரையில் தெரிவித்தார்.