இலங்கையின் முன்னணி சொகுசு ரியல் எஸ்டேட் நிறுவனமான Prime Lands Residencies PLC, தனது புதிய அதி-சொகுசு நிர்மாணத் திட்டமான ‘The Seasons Colombo 8’ இன் அடிக்கல் நாட்டலை கொண்டாடியது. இந்த பிரத்தியேகமான அதி- சொகுசு வாழிட அனுபவத்தை வழங்கும் இந்தத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதை அடிக்கல் நாட்டும் வைபவம் உணர்த்தியிருந்தது.
இந்நிகழ்வில் Prime Group இன் தவிசாளர் மற்றும் இணை தலைமை அதிகாரி, விசேட விருந்தினர்கள் மற்றும் பங்காளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். குரூப்பின் அதி-சொகுசு வதிவிடப் பிரிவான One Collection ஐச் சேர்ந்த விசேட சமூக அங்கத்தவராக திகழ்வதற்கான மற்றுமொரு விறுவிறுப்பான பயணமாக அமைந்திருந்தது.
துறையில் 30 வருட கால அனுபவத்தைக் கொண்டுள்ள Prime Group, உயர் தரம் வாய்ந்த செயற்திட்டங்களை பெற்றுக் கொடுத்து வீட்டு உரிமையாளர்களின் நம்பிக்கையை வென்றுள்ளது. இந்த புதிய செயற்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் கடினமான நியமங்களை பின்பற்றி அமைந்திருக்கும் என்பதுடன், உயர் தர வடிவமைப்பு மற்றும் நிர்மாணப் பணிகளின் போது ஒவ்வொரு விவரங்களிலும் கவனம் செலுத்தல் போன்றன தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்.
மக்கள் செறிந்து வாழும் கொழும்பு 08 இல் சந்திரலேகா மாவத்தை மற்றும் ஃபெயார்ஃபீல்ட் கார்டின்ஸ் ஆகியவற்றுக்கிடையே அமைந்துள்ள ‘The Seasons Colombo 8’, 44 வசிப்பிடங்களை வழங்கும் திட்டமாகும்.