இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகளை வழங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், “சிறந்த டிஜிட்டல் ஆயுள் காப்புறுதி வழங்குநர் – இலங்கை 2024” எனும் விருதை சுவீகரித்துள்ளது. குளோபல் பிஸ்னஸ் அன்ட் ஃபினான்ஸ் சஞ்சிகை விருதுகளின் மூலமாக இந்த விருது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. உலகளாவிய ரீதியில் வியாபாரங்கள் மற்றும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் ஸ்தாபனங்கள் ஆகியன தமது தொழிற்துறைகளுக்கு ஆற்றியுள்ள அதிசிறந்த பங்களிப்பு சாதனைகளை கௌரவிக்கும் வகையில் இந்த அமைப்பு செயற்படுகின்றது.
தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய செயற்பாடுகள் போன்றவற்றினூடாக, ஆயுள் காப்புறுதித் துறையை மாற்றியமைக்கும் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பங்களிப்புகளுக்கான, ஒப்பற்ற அர்ப்பணிப்பு போன்றவற்றுடன், டிஜிட்டல் மாற்றியமைப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதில் யூனியன் அஷ்யூரன்ஸ் கொண்டுள்ள தலைமைத்துவத்தையும் கௌரவிப்பதாக இந்த விருது அமைந்துள்ளது.
இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் தொழில்நுட்ப புத்தாக்கத்தை ஏற்படுத்துவதில் யூனியன் அஷ்யூரன்ஸ் நீண்ட காலமாக முன்னிலையில் திகழ்வதுடன், சிறந்த வாடிக்கையாளர் அனுபவங்களை ஏற்படுத்தும் புரட்சிகரமான செயற்பாடுகளினூடாக தொழிற்துறையில் புதிய நியமங்களை ஏற்படுத்திய வண்ணமுள்ளது.
நிறுவனத்தின் தூர நோக்கில்-சிந்திக்கும் வழிமுறையினூடாக, தேசத்தின் பாதுகாப்பு இடைவெளியை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்கு வலுவூட்டப்பட்டுள்ளது.