ஒரு நூற்றாண்டைக் கொண்டாடும் Rockland Group அண்மையில் அதன் 2024 Chairman’s Awards நிகழ்வை பிரமாண்டமான முறையில் நடத்தியது, இதனூடாக நூறு ஆண்டுகளில் அதன் திறன், சிறப்பு மற்றும் வலிமையை வெளிப்படுத்தியது. இலங்கை குடிபானத் துறையில் தனித்துவ அடையாளத்தைப் பதித்துள்ள Rockland Group, இலங்கையிலும் வெளிநாடுகளிலும் 500க்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்து 4 தலைமுறைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றுள்ளது. 500க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் மூலம் சர்வதேச சந்தையை கைப்பற்றி வரும் Rockland Group, அதன் வளமான பாரம்பரியத்தை அதே வழியில் தொடரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த Rockland Groupஇன் தலைவர் டெரிக் டி சில்வா விஜயரத்ன, செயல்திறன், பாதுகாப்பு, ஆய்வு, நேர்மை மற்றும் முழுமை ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தை நிறுவனத்தின் வெற்றிக்கு வழிவகுத்த தனித்துவமான காரணிகளாக சுட்டிக்காட்டினார். “ஒரு நிலையான எதிர்காலத்தை முன்னெடுத்துச் செல்வதில் இதுவரை எங்களின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நாங்கள் எதிர்கொண்ட ஒவ்வொரு சவாலிலும் அந்தக் காரணிகள் எங்களுக்கு பெரும் பலத்தை அளித்தன. அதனால்தான் அந்த சவால்களை எங்களால் சமாளிக்க முடிந்தது. நமது வெற்றிக்கு வழிவகுக்கும் இந்த காரணிகள் அனைத்தும் நமது எதிர்கால நடவடிக்கைகளிலும் சரியாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.” எனக் கூறினார்.