Home » விடைபெறுகிறார் நடால்

விடைபெறுகிறார் நடால்

by Damith Pushpika
October 20, 2024 6:21 am 0 comment

ரஃபேல் நடால் தனது இரண்டு தசாப்த டென்னிஸ் வாழ்வில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார். எனவே, நடாலைப் பற்றி தெரியாத ஒரு சில விடயங்களை இங்கு பார்ப்போம். 2002 இல் தொழில்முறை டென்னிஸ் வீரராக பயணத்தை ஆரம்பித்த நடால் ஒரு விளையாட்டு குடும்பத்திலிருந்து வந்தவர். அவருடைய ஒரு மாமா பார்சிலோனாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய நட்சத்திர ஸ்பானிய கால்பந்து வீரர் மற்றும் மற்றொருவர் தொழில்முறை டென்னிஸ் பயிற்சியாளராக இருந்தார்.

அவர் ஆரம்பத்தில் டென்னிஸ் மற்றும் கால்பந்து இரண்டிலும் ஆர்வத்தையும் திறமையையும் வெளிப்படுத்தினார். ஆனால் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கடைசியில் அவர் டென்னிஸை தேர்ந்தெடுத்தார்.

இளைஞர் மட்டத்தில் நடால் ஸ்பெயினை ஜூனியர் டேவிஸ் கிண்ணத்திற்கு அழைத்துச் சென்றார். பின்னர் 2001 இல் தனது 15 வயது மற்றும் 10 மாதங்களில் தொழில்முறை வீரராக அறிமுகமானார். நடாலின் முதல் ஏடிபி போட்டி வெற்றி, 16 வயதை எட்டுவதற்கு சற்று முன்பு, ரமோன் டெல்கடோவுக்கு எதிராக வந்தது. இது ஓர் அழகான கதையின் தொடக்கமாகும். இது தலைமுறைகளுக்கு மீண்டும் மீண்டும் சொல்லப்படும்.

நடால் 2003 இல் ஏடிபி தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் நுழைந்தபோது அவரது வாழ்க்கையில் ஒரு கூர்மையான உயர்வைக் கண்டார், அப்போதுதான் டென்னிஸ் ரசிகர்கள் அவரது பெயரைக் கவனிக்க ஆரம்பித்தனர். மான்டே கார்லோ மாஸ்டர்ஸின் இரண்டாவது சுற்றில் பிரெஞ்சு ஓபன் சாம்பியனையும், பின்னர் உலகின் 7ஆம் நிலை வீரர் ஆல்பர்ட் கோஸ்டாவையும் தோற்கடித்து டென்னிஸ் உலகை திகைக்கச் செய்தார்.

பிரெஞ்ச் ஓபனில் அறிமுகமாகும் வாய்ப்பை நடால் தவறவிட்டார், ஆனால் விம்பிள்டன் மற்றும் யுஎஸ் ஓபனில் தனது கிராண்ட்ஸ்லாம் பயணத்தைத் ஆரம்பித்தார்.

2004 இல் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஃபெடரருடன் தனது முதல் சந்திப்பில், நடால் மியாமி ஓபனின் மூன்றாவது சுற்றில் நேர்-செட்களில் வென்றதன் மூலம் ரசிகர்களுக்கு சிறப்பான சில காட்சிகளை வழங்கினார்.

2005 ஆம் ஆண்டு ரோலண்ட்-காரோஸில் ஃபெடரரை அரையிறுதியிலும், மரியானோ புவேர்டாவை இறுதிப் போட்டியில் தோற்கடித்து தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றது திருப்புமுனையாக இருந்தது. 2005 ஆம் ஆண்டு ஹார்ட் கோர்ட்டில் தனது முதல் வெற்றியை பதிவு செய்ய கனடா மாஸ்டர்ஸ் இறுதிப் போட்டியில் ஆண்ட்ரே அகாஸியை தோற்கடித்து ATP தரவரிசையில் 2ஆவது இடத்திற்கு உயர்ந்தார். அதைத் தொடர்ந்து ஒலிம்பிக் தங்கம் மற்றும் ‘கிங் ஒப் களிமண்’ பட்டத்தைப் பெற்றார். பின்னர் அசைக்க முடியாத வீரராக அவர் மாறினார்.

அவர் பெற்ற மொத்தப் பட்டங்கள் 95. கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் 22. அதிலும் பிரெஞ்ச் ஓப்பனில் அவரை அசைக்க முடியாது. 2022 வரை அந்தப் பட்டத்தை அவர் 14 தடவைகள் வென்றிருக்கிறார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division