எட்டாத தொலை
தூரத்திலே இருந்து
மண்ணுலகிற்கு
ஒளி தரும்
வெள்ளி நிலாவே
பூவுலகில் வாழும்
புலவர்கள் எல்லாம்
நீலவானில் பவனி
வரும் பால்நிலாவே
உன்னையே பெண்களின்
வதனத்திற்கு
ஒப்பிட்டு ஒப்பிட்டு
உவமை கூறி
கவிகள் புனைந்து
கவிப் பிரியர்களை
வசியப்படுத்தி
காலம் தள்ளுகின்றனர்
புலவர்கள்
அழகு நிலாவே
மனம் ஒருமித்த
காதலர்களும்
உன்னையே சாட்சியமாக
வைத்து “நிலாவே நீ சாட்சி”
என்று சத்தியம் செய்து
காதலில் விழுகின்றனர்.
காதலில் தோற்றவர்களும்
“நிலாவே வா செல்லாதே வா”
என்றும்
“வண்ணம் கொண்ட
வெண்ணிலவே வானம்”
விட்டு வாராயோ”
என்றும் நெஞ்சம்
உருக சோகராகம்
இசைந்து வாழ்வை
வீணடிக்கின்றனர்
அக்காலத்தில் அன்னையர்கள்
எல்லாம் அதோ
“அம்புலிமாமா” என்று
உன்னைக் காட்டி
குழந்தைகளுக்கு
அழுதூட்டி
ஆனந்தம் கொண்டனர்
கூடி வாழ்ந்த
கூட்டுக் குடும்பங்கள்
முற்றத்து வெளியில்
அமர்ந்து உன்னொளியில்
நிலாச்சோறுண்டு
ஆனந்தமாக இனிதே
வாழ்ந்தனர்.
மின்சாரம் இல்லா
அக்காலத்தில்
உன் ஒளியில்
படித்து மேதையானோர்
பலர் உண்டு
ஓலைக் குடிசையில்
வாழும் ஏழைகளுக்கு
இலவசமாய் ஒளி
பாய்ச்சி உன்னத
சேவை செய்கிறாய்
பொன் நிலவே
அண்மையில் காலமான
ஆம்ஸ்ரோங் முதன்
முதலில் (1963)இல்
உன்னை தொட்டு
சந்திரனை தொட்ட
சாதனை மனிதரானார்
பிறையாக இருந்து
பூரண நிலவாகி
மாதமொருமுறை
பூரண நிலவாகும்
ஈர நிலாவே
மண்ணுலகில் வாழும்
சின்ன புத்தி
கொண்ட சில
மனிதர்கள்
உன்மீதும் களங்கம்
சுமத்தி அகமகிழ்கின்றர்
அவனியில்
மண்ணில் உள்ள
மாந்தருக்கு இத்தனை
மகிமைகள் புரியும்
பால் நிலாவே
பைந்தமிழில்
இனிய சொல்லெடுத்து
உன்னை
வாழ்த்திய வணங்குகிறேன்
வட்ட நிலாவே
(பிறை fm ஊவா fm இல்
ஒலிபரப்பானது 2017.3.11)