AIA குழுமத்தின் சுகாதாரப் பராமரிப்புப் பணிப்பாளர் Dr.கிறிஸ்டியன் வார்ட்ஸ் சமீபத்தில் ஷங்ரிலா கொழும்பில் நடைபெற்ற சர்வதேச இலங்கைக் காப்புறுதி உச்சி மாநாடு 2024 இல் உரையாற்றியிருந்தார். இன்றைய சிக்கலான மற்றும் மாற்றங்கள் நிறைந்த பொருளாதாரச் சூழலில் காப்புறுதி வழங்குநர்களின் வளர்ச்சியடைந்து வரும் பங்கினைப் பற்றிக் கலந்துரையாடுவதற்காக உலகளாவிய தொழில்துறைத் தலைவர்கள், காப்புறுதித் திட்ட வல்லுநர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்கள் ஆகியோர் “சவால்கள் மற்றும் புதுமையான மாற்றங்கள் நிறைந்த பொருளாதாரச் சூழலில் காப்புறுதி வழங்குநர்களின் பங்கு” என்ற கருப்பொருளில் இங்கு ஒன்றுகூடி இருந்தனர்.
Dr..வார்ட்ஸ் ஆரோக்கியக் காப்பீடு, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சேவைகள் உட்பட சுகாதாரப் பராமரிப்புத் துறையில் 25 வருடங்களுக்கும் அதிகமான சர்வதேச அனுபவத்துடன் ‘வளர்ந்து வரும் பிராந்தியப் போக்குகள் மற்றும் டிஜிட்டல் தழுவலுடன் வைத்தியக் காப்பீட்டின் எதிர்காலம்’ பற்றிய தனது உள்ளார்ந்த அறிவினையும் இதன்போது பகிர்ந்து கொண்டிருந்தார். அவரது விளக்கக்காட்சி தொழில்துறையினை மாற்றியமைக்கும் முக்கிய போக்குகளை எடுத்துக்காட்டி இருந்ததுடன் பெறுமதி அடிப்படையிலான சுகாதாரப் பாதுகாப்பு, டிஜிட்டல் தீர்வுகளின் முக்கியத்துவம் மற்றும் சுகாதார இடர் நிர்வாகத்தை மேம்படுத்துவதில் பகுப்பாய்வு உள்ளறிவு மற்றும் வாடிக்கையாளர் அனுபவங்களை மேம்படுத்தி வழங்குவதற்காக சுகாதாரக் காப்புறுதியினை ஆரோக்கியப் பராமரிப்புச் சேவை விநியோகத்துடன் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றையும் உள்ளடக்கியிருந்தது.