Home » நாடு அனுரவோடு

நாடு அனுரவோடு

by Damith Pushpika
October 13, 2024 6:06 am 0 comment

இலங்கை எமது தாய் நாடு — இன்று
நாடு அனுரவோடு
தம்புத்தேகமவில் உன் வீடு – அதில்
உன் தாயும் உன்னோடு – தன்
தனயன் நாட்டின் தலைவன் என்ற
ஆனந்த கண்ணீரோடு

தம்புத்தேகம ஒரு சிறிய ஊரு – இன்று
உன்னால் அது
மிளிர்கிறது பெருமையோடு

நாடு அனுரவோடு – அவர்
கையொப்பமிட்ட கையோடு
மாற்றினார் புதுக் கோடு
நாட்டில் இருந்தது சில கேடு – இன்று அவை
விலகுது அவர் துணிவோடு.

மக்கள் அனைவரும் பெரும் கனவோடு
வாக்களித்தனர் பெரு மாற்றதோடு

நீ சொன்ன
“ஊழல் அற்ற நாடோடு
வெற்றி பெறுவோம் –
புது விடியலோடு”
இந்த நம்பிக்கையோடு
இணைந்தனர் மக்கள் உன்னோடு

தலைநகரில் – இன்று நீ
திறந்தாய் வருட கணக்கில்
மூடப்பட்ட சில
ரோடு (road) – அதுவே
தலைப்புச் செய்திகளில்
சக்கை போடு

தோழா
மேலும் மேலும்
உன் பணி சிறக்க போராடு
நம்பிக்கையோடு – என்றும்
இம் மக்கள் உன் தோளோடு

வெற்றி நடை நீ போடு – நல்ல
தலைவன் என்ற வாகை நீ சூடு
சரித்திரம் உன் புகழ் பாடும்
உலக நாடே உன் பெயர் கூறும்
வாழ்த்துகிறோம் நாமும்
நாடு அனுரவோடு!-

நுஷ்ஹா

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division