எமது தினகரன் / வாரமஞ்சரியின் மாளிகைக்காடு குறூப் நிருபரான சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஓய்வுபெற்ற பட்டதாரி ஆசிரியருமான அஸ்ஹர் இப்பறாஹிம் தனது 62 ஆவது வயதில் நேற்று(05) அதிகாலை காலமானார். அன்னாரது ஜனாஸா நேற்றிரவு மாளிகைக்காடு தக்வா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கல்முனை மாளிகைகாட்டைச் சேர்ந்த, நான்கு ஆண் பிள்ளைகளின் தந்தையான இவர், மரணிக்கும் வரை ஊடகத்துறைக்கு செய்த சேவை அளப்பரியது. மள்வானை மத்திய கல்லூரி, கல்முனை ஸாஹிரா கல்லூரி, பட்டிருப்பு தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராகவும் அன்னார் பணியாற்றியுள்ளார். விஞ்ஞானத்துறை பட்டதாரியான அஸ்ஹர், பாடசாலைகளில் விளையாட்டு துறையோடு சேர்ந்த நிகழ்வுகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். சிரித்த முகம் இவரது அடையாளம். மென்மையாக பழகும் பண்பும் அடக்கமும் இவரோடு கூட பிறந்தவை. ஊடகத்துறையில் இவர் காட்டிய ஆர்வமும் நெறி பிறளாத பண்பும் என்றும் காலத்தால் அழியாதவை. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய தினகரன் / வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் உட்பட ஆசிரியர் பீடம் பிரார்த்திக்கிறது.
சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்ஹர் காலமானார்
68
previous post