40
உலகு உறங்குவதில்லை மானுடா ..!
தோல்வி கண்ட மனிதன்போல்
அது விழித்துக்கொண்டே
இருக்கிறது !
மனிதப் பிரயாசைகளாக,
அவர்தம் மலினங்களாக ..
மானுட மௌனங்களாக,
அவர்தம் மரணங்களாக
உலகு உறங்குவதில்லை மானுடா ..!
காவியக் கவியரசு எம்.எஸ்.அப்துல் ஹை