நிலைபேறான வளர்ச்சிக்கான திறன்கள் (SSG) செயற்றிட்டம், ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆறு புதிய பயிலல் நிலையங்களை ஆரம்பித்து மற்றுமொரு முக்கியமான மைல்கல்லை எய்தியுள்ளது. இந்த நிலையங்கள், களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, கம்பஹா மாவட்டத்தின் கட்டுநாயக்க, கொழும்பு மாவட்டத்தின் ராஜகிரிய, மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை, திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி மற்றும் அம்பாறை மாவட்டத்தின் அம்பாறை ஆகிய பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன. ஏற்கனவே நான்கு நிலையங்கள், கண்டி மாவட்டத்தின் செங்கடகல, மாத்தளை மாவட்டத்தின் நாவுல, நுவரெலியா மாவட்டத்தின் மீபிலிமான மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வீரவில பகுதிகளில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த விரிவாக்கத்துடன், இலங்கையில் 10 மாவட்டங்களுக்கு SSG தனது இளைஞர் விருத்தி செயற்பாடுகளை விஸ்தரித்துள்ளது. அதனூடாக, நாட்டில் காணப்படும் மாபெரும் விருந்தோம்பல் கற்கைகள் நிலையங்களில் ஒன்றாக திகழ்கின்றது. குறைந்த வசதிகள் படைத்த இளைஞர்களுக்கு இன, மத, பாலின பாகுபாடின்றி சமமான வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கின்றது. அண்மைய புள்ளிவிவரங்களின் பிரகாரம், 600 க்கும் அதிகமான மாணவர்கள் தம்மை பதிவு செய்து கொண்டுள்ளதுடன், தற்போது பயிற்சிகளைப் பெறுகின்றனர். 2024 ஆம் ஆண்டின் இறுதியில் மேலும் 970 மாணவர்களை உள்வாங்கி பயிற்சியளிப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில், புதிய நிலையங்களை ஆரம்பிப்பதற்கான திட்டங்களும் அடங்கியுள்ளன. 2025 ஆம் ஆண்டுக்கான இலக்கானது, சகல 10 நிலையங்களிலும் 1830 மாணவர்களை பதிவு செய்வதாகும்.
10 பயிலல் நிலையங்களை ஆரம்பித்து புதிய மைல்கல்லை எய்தியுள்ள SSG செயற்றிட்டம்
76
previous post