95
தேசிய மக்கள் சக்தியினால் மாயாஜாலங்களையோ அதிசயங்களையோ செய்ய முடியாதென ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்
மொனராகலை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இந்த நாட்டை செல்வந்த நாடாக மாற்றுவதற்கும் மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்கும் முயற்சிக்க முடியும் எனவும், இந்த திட்டங்கள் வகுக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.
இதனை செய்யக்கூடிய வலுவானவர்கள் தமது கட்சியில் இருப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.